கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921 ஆம் ஆண்டு பிறந்த இளவரசர் பிலிப், 1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்துகொண்டார்.

4 குழந்தைகளைப் பெற்ற இவர்கள் 8 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் மூலம் 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளையும் பார்த்துள்ளனர்.

இங்கிலாந்து வரலாற்றிலேயே மிக நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்த அரச தம்பதிகள் என்ற பெருமை இவர்கள் இருவரையே சேரும். இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு பல்வேறு உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 திகதி கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் அன்ட்றூவுக்கு மகனாக கிரீஸ் நாட்டில் பிறந்தார். (அப்போது கிரீஸ் நாடு ஜூலியன் காலண்டரை பயன்படுத்தியது. 1923 ஆண்டுக்கு பின் கிரகேரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டது).

1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரீஸ் மன்னர் கொன்ஸ்டன்டைன் உத்தரவின் படி, இவரது குடும்பம் பிரான்ஸின் பாரிசுக்கு இடம் பெயர்ந்தது.

1928 ஆம் ஆண்டளவில் ஜேர்மன், பிரிட்டனில் கல்வி பயின்றார் பிலிப்.

1934 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை கிரிக்கெட், ஹொக்கி அணியில் அணித் தலைவராக  இருந்தார்.

1934 ஆம் ஆண்டு காலத்தில் வெஸ்ட்மினிஸ்டர் அபே சேர்ச்சில் நடந்த பிலிப் உறவினர் திருமணத்தில், எலிசபெத்தை முதன்முதலாக சந்தித்தார்.

1939 ஆம் ஆண்டில் பிரிட்டன் கப்பல்படையில் பிலிப் பயிற்சி பெற்றார்.

1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கல்லுாரியில் படித்த எலிசபெத், அவரது தங்கை மார்க்ரெட் பாதுகாப்புக்கு உடன் சென்ற பிலிப் மீது எலிசபெத்துக்கு காதல் மலர்ந்தது.

1940 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆறு மாதம் கப்பல்படையில் பணியாற்றினார்.

1943 ஆம் ஆண்டு இவரது புகைப்படத்தை தனது டிரஸ்சிங் டேபிள் மீது எலிசபெத் வைத்திருந்தார்.

1944 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் உலகப்போரின் போது இந்திய பெருங்கடல் பகுதியில் 'எச்.எம்.எஸ்., வெல்ப்' போர்க்கப்பலின் கேப்டனாக பணியாற்றினார்.

1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஜப்பான் சரணடையும் போது, டோக்கியோ கடல் பகுதியில் பணியில் இருந்தார்.

1946 ஆம் ஆண்டு பிரிட்டன் திரும்பினார் பிலிப். எலிசபெத்தை திருமணம் செய்து வைக்க மன்னர் ஆறாம் ஜோர்ஜிடம் கோரிக்கை விடுத்தார்.

1947 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி டென்மார்க் , கிரீஸ் இளவரசர் பட்டத்தை விட்டுக்கொடுத்து, பிரிட்டன் குடியுரிமை பெற்றார்.

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பிலிப் - எலிசபெத் திருமணம் வெஸ்ட்மினிஸ்டர் அபே சேர்ச்சில் நடைபெற்றது.

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி மன்னர் ஆறாம் சார்லஸ் மறைவுக்குப்பின் அவரது மகள் எலிசபெத் பிரிட்டன் ராணி ஆனார்.

1956 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் இயக்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை ( லைசென்ஸ் ) பெற்றார்.

1961: இந்திய பயணத்தின் போது ஜெய்ப்பூரில் துப்பாக்கியால் புலியை சுட்டுக் கொன்றார். இது சர்ச்சையானது.

2009 ஆம் ஆண்டு பிரிட்டன் அரச குடும்ப வரலாற்றில் நீண்டகால இளவரசரானர்.

2011 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பிலிப் - எலிசபெத் தங்களது 73 ஆவது திருமண நாளை கொண்டாடினர்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பிலிப், எலிசபெத் இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி உடல்நலக்குறைவால் இளவரசர் பிலிப் காலமானார்.