இளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்

Published By: Digital Desk 3

10 Apr, 2021 | 01:17 PM
image

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத்தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை வின்சர் கோட்டையிலுள்ள பெர்க்மோர்  (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று (09.04.2021) காலமானார்.

மறைந்த இளவரசர் பிலிப், 1921 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து மகா  ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.

சுமார் 65 வருடங்கள் மகா ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக்கொண்டார்.

இவர் மகாராணி எலிசபெத்தின்  ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர் பிலிப்.

கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிலிப்பிற்கு  ஏற்கனவே இருந்த இருதய நோய் மற்றும் நோய்தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்று காலமானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47