ஏ.பி.டிவில்லியர்ஸின் அதிரடியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட்டுகளால் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 2021 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.
ரோகித் சர்மா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ஓட்டங்ளை பெற்று ஆட்டமிழந்தார்.
கிறிஸ் லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ஓட்டங்களை எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ஓட்டங்களுடனும் இஷான் கிஷன் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 160 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வொஷிங்டன் சுந்தர், விராட் கோலி இறங்கினர்.
சுந்தர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய படிதார் 8 ஓட்டங்களைப் பெற்று ஏமாற்றினார். தொடர்ந்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல்லும், விராட் கோலியும் 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தனர்.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 98 ஆக இருக்கும்போது விராட் கோலி 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் மேக்ஸ்வெல் 39 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ் முதலில் நிதானமாக ஆடினார். அதன்பின் அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் நடப்புச் சம்பியன் மும்பையை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM