கடலில் மிதந்து வந்த போத்தல் பானத்தை பருகியவர் பரிதாபமாக பலி

10 Apr, 2021 | 06:23 AM
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த போத்தல் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வரையானோர் பருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தினை அடுத்து உடல் நிலை பாதிப்பினை எதிர்கொண்ட ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் (46) என்று தெரியவந்துள்ளது.

சடலம் ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து சிலர் தாமாகவே வைத்தியசாலைக்குச் சென்று தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் குறித்த போத்தலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25