யாழ். மாநகர மேயர் சட்டத்திரணி மணிவண்ணனின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

No description available.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் தனது டுவிட்டரில் யாழ். மாநகர மேயரின் கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “யாழ். மாநகர மேயரின் கைது கவலைக்குரியது . அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாக்கும் அதேநேரத்தில், இறுக்கமான சட்ட விதிமுறைகளே (நீதித்துறை பாதுகாப்புகளுடன் ) பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழியாகும்.”

என்று அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.