இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் காலமானார்.

இளவரசர் பிலிப் கடந்த 1947 ஆம் ஆண்டு மகாராணி எலிசபத்தை திருமணம் செய்து கொண்டார்.

வின்ட்ஸ்சோர் மாளிகையில் இளவரசர் பிலிப் இன்று காலை காலமானதாக பிரித்தானிய அரச குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதய நோய் காரணமாக பல நாட்களாக லண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசர் பிலிப், சிகிச்சை நிறைவுபெற்று அண்மையில் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.