காத்தான்குடியில் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்த இரு கொள்ளையர்கள் சிக்கினர்

Published By: Gayathri

09 Apr, 2021 | 05:42 PM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாளங்குடா, பூநொச்சிமுனை பிரதேசங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியால் சென்ற பெண்களின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலிகளை அறுத்து வந்த இரு கொள்ளையர்களை இன்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்ததுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அண்மைக் காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும் பெண்களை கொள்ளையர்கள் இலக்குவைத்து மோட்டர்சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து அவர்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடிவருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை தனிமையில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டர்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் காத்தான்குடி பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 20,19 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் அறுக்கப்பட்ட 2 பவுண் தங்கச் சங்கிலி ஒன்றையும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும்  தாளங்குடா மற்றும் பூநொச்சிமுனையில் இடம்பெற்ற இரு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08