வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பகல் நேரத்தில் பணம் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வர்த்தக நிலையில்  இடம்பெற்ற குறித்த  திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வர்த்தக நிலையமொன்றிக்கு சென்ற நபரொருவர் வர்த்தக நிலைய உரிமையாளரிடம் பொருட்களை கோரியுள்ளார்.

வர்த்தக நிலைய உரிமையாளர் பொருட்களை எடுக்க சென்ற சமயத்தில் வர்த்தக நிலைய காசாளர் மேசையினை திறந்து அதிலிருந்த பணத்தினை களவாடி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ் திருட்டு சம்பவம் தொடர்பான சி.சீ.ரீ.வி காணொளி வெளியாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்