முதலையின் பிடியில் சிக்கி காணாமல் போயுள்ள நான்கு பிள்ளைகளின் தந்தை ; திருக்கோவிலில் சம்பவம்

By T. Saranya

09 Apr, 2021 | 12:36 PM
image

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  இத்திகுளத்தில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை பிடியில் சிக்கி காணமல் போயுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கழமை  09 .30 மணியவில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.திலகரட்ன தெரிவித்தார்.

குடி நிலம் பகுதியில் வசிக்கும்  62 வயதுடைய 4 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு முதலை பிடியில் சிக்கி நீரில்  மூழ்கி காணமால் போயுள்ளார்.

இந்நிலையில், காணமல் போனவரை தேடும் பணி முன்னேடுக்கப்பட்டு வருவதுடன், மீட்பு பணிக்காக கடற்படையின் உதவியை நாடியுள்ளதாக  திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right