சஜித் சுய மரியாதையை பாதுகாத்து ரஞ்சனின் விவகாரத்தை மறந்து விட வேண்டும் -  எஸ். பி. திஸாநாயக்க

09 Apr, 2021 | 06:44 AM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது பயனற்றது. 

அவர் நீதிமன்றத்தை அவமதித்தமை பல்வேறு  சாட்சியங்கள் ஊடாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆகவே எதிர்க்கட்சி தலைவர்  தனது சுயமரியாதையினை பாதுகாத்துக் கொள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை விவகாரத்தை  இனியாவது மறந்து விட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின்  உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையினை பாதுகாக்க எதிர்க்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். 

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே சபாநாயகர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகும் என அறிவித்தார். 

இவ்விடயத்தை கொண்டு எதிர் கட்சியினர் பாராளுமன்றில்  அசாதாரண சூழ்நிலையினை ஏற்படுத்துகிறார்கள்.

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறை சென்றுள்ளமைக்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 

இவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை அரசியல் பழிவாங்கள்  என கூறுவதை எதிர் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரச அதிகாரத்தை பயன்படுத்தி நீதிமன்ற செயற்பாடுகளில் இவர் அநாவசியமான முறையில் தலையிட்டுள்ளார். 

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமையால் தற்போது தண்டிக்கப்பட்டுள்ளார்.  செய்த தவறை திருத்திக் கொள்ள அவர் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. 

இவரது  முறையற்ற செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் குறுகிய தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதற்கு நீதியை பெற்றுக் கொள்ள சர்வதேச நீதிமன்றத்தை  நாடுவதாக எதிர்தரப்பினர் கூறுகின்றனர். 

இவ்விடயத்திற்கு சர்வதேச நீதிமன்றம் செல்வது  என்று குறிப்பிடுவது எதிர் தரப்பினரது  நிலையினை எடுத்துக்காட்டுகிறது. நீதித்துறையை அவமதிப்பதை சர்வதேச நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

 எதிர்க்கட்சி தலைவர் தனது சுய மரியாதையை பாதுகாத்தக்  கொள்ள ரஞ்சன் ராமநாயக்கவின்  பாராளுமன்ற உறுப்புரிமை விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்துவதை கைவிட வேண்டும்.  

நீதிமன்றத்தை ரஞ்சன் ராமநாயக்க அவமதித்தமை பல்வேறு சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58