பதுளை சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Published By: T Yuwaraj

08 Apr, 2021 | 08:48 PM
image

பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர், சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது.

கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையிலிருந்த கைதியை, சிறைக் காவலர்கள் மீட்டு, பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டப் போதிலும், சிகிச்சை பயனின்றி, உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதுளை கலுகல்பிட்டிய என்ற இடத்தைச் சேர்ந்த பிரமித் சானக்க என்ற 36 வயது நிரம்பிய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், பதுளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இவர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56