திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர ஆகிய இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருமதி இலங்கை அழகிப்போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக மேற்கொண்டிருந்த முறைப்பாட்டிற்கு அமைவாக கருவாத்தோட்டம் பொலிஸாரால் இருவரும் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இருவரிடமும் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.