எம்முடைய இல்லங்களில் வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய் போன்ற செல்லப் பிராணிகள் மூலம் எம்மில் பலருக்கும் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது இதனை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எம்மில் பலருக்கும் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பாதிப்பை உண்டாக்குவதில் செல்லப் பிராணிகளான பூனை மற்றும் நாய்க்கு முக்கிய பங்களிப்பு உண்டு.

குறிப்பாக பூனையினால் மனிதர்களுக்கு ஏற்படும் ஒவ்வாமை அதிகம். பூனையின் முடி, உமிழ்நீர், சிறுநீர், பூனையின் சருமத்தின் மேல் பகுதியில் உற்பத்தியாகும் ஒருவகையினதான புரதம் ஆகியவை மனிதர்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்குகின்றன.

அதனால் பூனையை வளர்ப்பவர்கள் தங்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஆஸ்த்மா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் பூனை நாய் போன்ற செல்லப் பிராணிகளால் மிக மோசமான நிலைக்கு செல்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இத்தகைய ஒவ்வாமை ஏற்பட்டால் அதனை இரத்த பரிசோதனை மற்றும் Intradermal Test எனப்படும் பரிசோதனைகளின் மூலம் பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள். இதனை குணப்படுத்த Allergen- specific Immunotherapy என்ற சிகிச்சை தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதற்கு தற்போது புதிதாக Novel Immunotherapy என்ற சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. இத்தகைய சிகிச்சையின் மூலம் பூனை மற்றும் நாய் மூலம் ஏற்படும் ஒவ்வாமை ஒவ்வாமையின் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் தீப்தி மோத்திராம்