தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிறைவடைந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் துரைமுருகனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனாத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவரின் அறிவுரையின் படி அவர், அவருடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இதனிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகனுக்கு ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.