பாகிஸ்தானியப் படையினர் மாறுவார்களா ?

Published By: Gayathri

08 Apr, 2021 | 04:21 PM
image

– வேல் தர்மா

உலகின் ஏழாவது பெரியதான பாக்கிஸ்த்தானின் படைத்துறையினர் உலகின் 42 ஆவது பெரிய பொருளாதாரத்தை பெரிதும் கட்டுப்படுத்துகின்றனர். 

விவசாய நிலங்களில் இருந்து விளையாட்டுத்திடல்கள் வரை பல உற்பத்தி துறைகள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

பாக்கிஸ்த்தானியப் படையினர் நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்ற போர்வையில் தேசிய வருமானத்தின் பெரும்பகுதியை தமது துறைக்கு பெற்றுக் கொள்கின்றனர். 

2020/21இற்கான நிதி ஒதுக்கீட்டில் ஆரோக்கியத் துறைக்கு 151 மில்லியன் டொலர்களும் பாதுகாப்புத்துறைக்கு 7.85பில்லியன் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் நான்கு பில்லியன் டொலர்கள் பாக்கிஸ்த்தானின் படைத்துறைக்கு வேறு பெயர்களில் செய்யப்படுகின்றன. நாட்டின் வருமானம் 2.4 விழுக்காடு வீழ்ச்சியடைந்த நிலையில் பாதுகாப்புத் துறைக்கான செலவு 12விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

படைவலுப்பெருக்க சங்கிலித்தொடர்

அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா தனது படை வலிமையைப் பெருக்குகின்றது. சீனாவின் படை வலிமை தனக்கு ஆபத்து என இந்தியா தனது படைவலிமையைப் பெருக்குகின்றது. 

அதனால் பாக்கிஸ்த்தானும் இந்தியாவிற்கு போட்டியாக தனது படைவலிமையைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றது. 

மேலும் இந்தியாவில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி பாக்கிஸ்த்தான் தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டில் இருக்கின்றது. 

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாக்கிஸ்த்தான் வசமுள்ள காஷ்மீர் பிராந்தியத்தை கைப்பற்றுவோம் என 2019இல் சூளுரைத்துள்ளார். 

இந்தியா வசமுள்ள காஷ்மீர் பிராந்தியத்தில் சிறப்பு உரிமைகளை இந்திய அரசு 2019 ஓகஸ்ட் மாதம் இல்லாமற் செய்த பின்னர் பாக்கிஸ்த்தான் இந்தியாவுடனான தனது வர்த்தகத்தை துண்டித்தது. 

ஆனால், உலக அரங்கில் இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தான் எடுத்த முயற்ச்சிகள் தோல்வியைத் தழுவின. இஸ்லாமிய நாடுகள் பல இந்தியாவைக் கண்டிக்கவில்லை. 

2021 மார்ச் 23 ஆம் திகதி பாக்கிஸ்த்தான் தனது குடியரசு நாளை பெரும் படை அணிவகுப்புடன் கொண்டாடுவதை விமர்சித்த தஹா சித்திக் என்னும் ஆய்வாளர், 'வறிய நாடு ஆனால் செல்வம் மிக்க படையினர்' என்றார். 

இந்தியாவால் பாக்கிஸ்த்தானுக்கு ஆபத்து என்ற அச்சுறுத்தலை உயிர்ப்புடன் வைத்திருந்து பாக்கிஸ்த்தானியப் படையினர் தம்மை செல்வந்தர்களாக்கிக் கொண்டிருக்கின்றனர். 

பாக்கிஸ்த்தானின் 72 ஆண்டு வரலாற்றில் பாதிக்காலம் படையினரே நாட்டை ஆட்சி செய்தனர். 

விமானங்களில் புகைப்பிடிப்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தும் 2017ஆம் ஆண்டு பாக்கிஸ்த்தானின் மேஜர் ஜெனரல் அஸிஃப் கஃபூர் இலண்டனில் இருந்து பாக்கிஸ்த்தானுக்குச் சென்ற பாக்கிஸ்த்தான் விமானத்தில் புகை பிடித்தபோது விமானப் பணியாளர்கள் வாய் திறக்கவில்லை. பாக்கிஸ்த்தானிய சட்டங்கள் படையினருக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும். 

சீன-பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதை

2015 ஆம் ஆண்டு சீன-பாக் பொருளாதாரப் பாதை ஆரம்பிக்கப்பட்டபோது அது பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்தை பெரிதும் தூக்கி நிறுத்தும் எனப் பறை சாற்றப்பட்டது.

சீனாவின் ஒரு பாதை ஒரு வலயம் என்ற புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் ஓர் பகுதியான சீன-பாக் பொருளாதாரப் பாதை ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் பெறுமதி 47பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டது. அதன் இன்றைய பெறுமதி 62பில்லியன் டொலர் எனப்படுகின்றது. 

ஆனால், இதன் பல பகுதிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றது. குவாடர் துறை முகத்திட்டம், குவாடர் நகரத்திட்டம், பல நீர்-மின் உற்பத்தித் திட்டங்கள், குவாடரில் இருந்து சீனாவிற்கான நெடுஞ்சாலை எனப் பல திட்டங்களை உள்ளடக்கியது சீனா-பாக் பொருளாதாரப் பாதைத் திட்டம். 

இத்திட்டங்களிற்கான நிதியை எப்படிப் பெறுவது என்பது தொடர்பாக பாக்கிஸ்த்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் ஒற்றுமை இல்லாத படியால் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. 

பொருளாதாரப் பிரச்சனையும் வெளியுறவும்

பாக்கிஸ்த்தானின் கடன் மீளளிப்பு அதன் மொத்த செலவீனங்களில் 41விழுக்காடாக உயர்ந்திருப்பது படையினரைச் சிந்திக்க வைத்துள்ளது. 

கொவிட் 19 தொற்று நோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாக்கிஸ்த்தானும் ஒன்று என்ற படியால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்யாமல் தடுப்பது எப்படி என படைத்துறையினர் சிந்திக்கின்றனர். 

ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய பின்னர் பாக்கிஸ்த்தானை அமெரிக்காவிற்கு கேந்திரோபாய அடைப்படையிலான தேவை மிகக் குறைவானதாகவே இருக்கும்.

அமெரிக்காவின் நிதி உதவி இப்போது பாக்கிஸ்த்தானுக்கு அதிகம் தேவைப்படுகின்றது. இதனால் பாக்கிஸ்த்தானியப் படைத் தளபதி பிரித்தானியா சென்று தமது படையினரின் உடை, நடவடிக்கைகள் போன்றவை மேற்கு நாட்டு பாணியில் இருக்கின்றன என்றும், தாம் மேற்கு நாடுகளின் நண்பர்கள் என்றும் தெரிவித்து அந்த தகவலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சொல்லும்படி பிரித்தானியப் படையினரையும் அரசுறவியலாளர்களையும் வேண்டிக் கொண்டனர். 

2017இன் பின்னர் பல பாக்கிஸ்த்தான் படை அதிகாரிகள் பிரித்தானியாவிற்கு தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டு மேற்கு நாடுகளின் நட்பை வேண்டி நிற்கின்றனர். 

தாம் சீனாவின் பங்காளிகள் அல்ல என்பதை அவர்கள் மேற்கு நாடுகளுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றார்கள். 

ஆப்கானிஸ்த்தானில் போராடும் தலிபான்களுக்கு பாக்கிஸ்த்தானியப் படையினரும் உளவுத்துறையினரும் இரகசியமாக உதவிசெய்வது, மேற்கு நாடுகளை பாக்கிஸ்த்தான் மீது அதிருப்தி கொள்ளவைத்தது. 

பாக்கிஸ்த்தானிய மண்ணில் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுவதையும் மேற்கு நாடுகள் இப்போது வெறுப்பதுடன் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாக்கிஸ்த்தான் படையினரை வற்புறுத்துகின்றனர். 

இந்தியாவின் நீராயுதம்

பாக்கிஸ்த்தானிற்கு எதிராக இந்தியாவின் இந்துத்துவா ஆட்சியாளர்கள் நீரை பாவிக்க தயங்க மாட்டோம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். 

சீனக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உற்பத்தியாகி இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு பாயும் பிரம்மபுத்திரா நதி இந்தியாவினூடாகவே பாக்கிஸ்த்தான் செல்கின்றது. 

அதன் குறுக்கே அணை கட்டி பாக்கிஸ்த்தானிற்கு செல்லும் நீரை குறைக்க அல்லது இல்லாமற் செய்ய இந்தியாவால் முடியும். 

உலகிலேயே அதிக நீரில்லாப் பிரச்சனையை எதிர் கொள்ளும் பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரம் இந்திய நீர்த்தடையால் பெரிதும் பாதிக்கப்படும். 

2000 ஆம் ஆண்டின் பின்னர் சீனாவுடன் அதிக உறவு பாராட்டிய பாக்கிஸ்த்தானிய ஆட்சியாளர்கள் தமது பொருளாதாரத்தை வளர்க்க சீன உறவு உதவாது என உணர்ந்து கொண்டு 2017இல் இருந்து மேற்கு நாடுகளுடன் நட்பை வளர்க்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். 

மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒத்துழைப்பால் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு மேற்கு நாடுகளுடன் உறவை வளர்க்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. 

அதனால் பாக்கிஸ்த்தான் இந்தியாவுடன் உறவை சீர்செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

இந்தியப் பூச்சாண்டி காட்டி தம்மை மேன்மையான நிலையில் வைத்திருக்கும் பாக்கிஸ்த்தானியப் படையினர் மாறவேண்டிய நிலை இருக்கின்றது. ஆனால் இந்தியா பாக்கிஸ்த்தான் வசமுள்ள காஷ்மீரை அபகரிக்க உரிய தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22