வவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழு யாழில் கைது

Published By: Digital Desk 4

08 Apr, 2021 | 04:19 PM
image

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வேனில் வந்து வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய குழுவினரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றினுள் காதல் விவகாரத்தினால் வீடொன்றினுள் புகுந்து குழுவொன்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்நிலையில் அக்குழுவினர் பயணித்த வாகனத்தின் இலக்கம் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் கவனத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினராலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் எவரும் கைது செய்யப்படாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தலையிட்டும் கைது நடவடிக்கை இடம்பெறாத நிலை காணப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, குறித்த சம்பவம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு வாகன இலக்கம் தரப்பட்டது. அவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி செல்வதாகவும் கூறப்பட்டது.

நான் உடனடியாக குறித்த இலக்கத்தினை பொலிஸாருக்கு வழங்கி வானை மறித்து அதனுள் உள்ளவர்களை கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கேட்டிருந்தேன்

எனினும் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் கைது நடவடிக்கை இடம்பெறாமையினால் பொலிஸ் மேலதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன் வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு விசேட குழுவொன்று அனுப்பப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41