பணயக்கைதிகள் மீட்பு மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடித்தல் பாடநெறி இலக்கம் 28 இன் 56 கமாண்டோ படையினரும் நாய்களை கையாளும் சிப்பாய்களின் பாடநெறி இலக்கம் 09 இன் 32 பேருமாக  நாட்டின் முன்னோடி விதிவிலக்கான செயல்பாட்டுப் படைக்கு மற்றொரு கமாண்டோ படை குழு கணேமுல்லை கமண்டோ படைத் தலைமையகத்தில் இணைந்துக் கொண்டது.  நேற்று புதன்கிழமை  இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டார்.பணயக்கைதிகள் மீட்பு மற்றும் பயங்கரவாத செயல்பாட்டுக் கடமைகளைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  தகுதி பெற்ற 3 அதிகாரிகள் மற்றும் 53 சிப்பாய்களும் கே 9 போர் நாய்களை கையாளும் பாடநெறி இலக்கம்  9 இல் 32 சிப்பாய்களும் தங்களது அங்கீகாரங்களை பிரதம அதிதி மற்றும் படைத் தளபதியின் பிரசன்னத்துடன் பெற்றுக் கொண்டனர்.


கேப்டன் டி கே பி ஜயசேகர சிறந்த குறிபார்த்து சுடும் வீரருக்கான விருதினையும் , பணயக்கைதிகள் மீட்பு மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடித்தல் பாடநெறி இலக்கம் 28 இன் சிறந்த மாணவருக்கான விருதினையும் பெற்றுக் கொண்டார். நாய்களை கையாளும் சிப்பாய்களின் பாடநெறி இலக்கம் 09 இன் சிறந்த நாய்களை கையாளுபவராக கோப்ரல் எச் எல் குணசேகர தெரிவு செய்யப்பட்டார்.

விருது வழங்களின் பின்னர் படையினருக்கு உரையாற்றுகையில் ஜெனரல் சவேந்திர சில்வா தகுதி பெற்றவர்களை வாழ்த்தியதுடன் நாட்டின் நலனுக்காக அவர்களின் கடமைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.