நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நக்மா தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் அவரது ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.