அம்பாறை, ஒலுவில் பகுதியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு தீவிரவாத சித்தாந்தங்கள் குறித்த சொற்பொழிவனை நடத்தியமைக்காக இரு சந்தேக நபர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒலுவில் பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் தமது சொற்பொழிவுக்காக பல்வேறு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் காணொளி காட்சிகள் மற்றும் விரிவுரைகளின் உள்ளடக்கத்தை பயன்படுத்தியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அது மாத்திரமன்றி மாணவர்களுக்கு உடற் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அதனை ஏற்க மறுக்கும் மாணவர்கள் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் கைதான நபர்கள் கொழும்புல் உள்ள பயங்கரவாத புலனாய்விப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சஹ்ரான் ஹாஷிம் இந்த இருவருக்கும் பயிற்சி அளித்ததாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM