திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் கைதான பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று (7) உத்தரவிட்டார்.
குறித்த பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்குச் சென்ற 12 மற்றும் 14 வயதான இரு சிறுவர்களை பௌத்த பிக்கு தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விஹாராதிபதியை இன்று புதன்கிழமை (07) பொலிசார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவை இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் 9 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டா.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM