மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளியிடல்

Published By: Gayathri

07 Apr, 2021 | 04:07 PM
image

மியன்மார் நெருக்கடிகளின் சக்கரத்தில் உழலும் தேசம். ஆயுதமோதல்களும் இரத்தக்களரியும் தலைவிதியாகிப் போன மக்கள், இன்று சிவில் யுத்தத்தை நோக்கி நகர்கின்றனரா? என்பது தலையாய கேள்வி.

கடந்த ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த அரசாங்கத்தை, சதிப்புரட்சியின் மூலம் கவிழ்த்த இராணுவம் ஒருபுறம்.

இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக சிவில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து, தீவிரமாக போராடும் இனக்குழுக்கள் மறுபுறம்.

தீவிரம் பெற்று வரும் எதிர்ப்பலையைத் தடுப்பதற்காக இராணுவம் பிரயோகித்த வன்முறையில் உயிர்கள் பலியாகின்றன.

கடந்த திங்கட்கிழமை ஆகக்கூடுதலான சாவுகள் நிகழ்ந்தன. கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்கும்.

மியன்மாரில் பிரத்தியேகமான 135 இனக்குழுமங்கள் உண்டு. இவற்றில் பல குழுக்கள் இராணுவத்திற்கு எதிராக கொரில்லா யுத்தம் செய்தவை.

இந்தக் குழுக்கள் ஒன்றுசேர்ந்து, இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ‘சமாந்தர அரசாங்கத்தை’ அமைத்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

கேரன் தேசிய யூனியன் என்ற குழு முக்கியமானது. இந்தக் குழு மியன்மாரின் தென்கிழக்கில் உள்ள கேரன் என்ற மாநிலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

மியன்மார் இராணுவத்தின் போர் விமானங்கள், இந்த மாநிலத்தில் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் பலியானார்கள்.

இந்த மாநிலத்தில் இராணுவ புரட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தீவிர போராட்டம், நகர்ப்புறங்களில் இருந்து வனாந்தரப் பிரதேசங்களையும், எல்லைக் கிராமங்களையும் நோக்கி நகர்ந்தது.

இவை வரலாறு நெடுகிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த இனரீதியான ஆயுதக் குழுக்களின் கோட்டைகள்.

இங்கொரு பிரதேசத்தில் மனிதப் பேரவலம் நிகழ்கிறது. ஒரு மக்கள் கூட்டம் விமானத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக குகையொன்றில் தஞ்சம் கோரிய வேளையில், மற்றொரு குழு உயிருக்கு அஞ்சி தாய்லாந்தை நோக்கி தப்பியோடும் சூழ்நிலை.

அகதிகளாக சென்றவர்களை தாய்லாந்து இராணுவம் விரட்டி அடித்ததாக வெளியான தகவல்களை தாய்லாந்தின் பிரதமர் நிராகரித்துள்ளார். 

தகவல்கள் இருட்டடிக்கப்படும் நிலையில், உண்மை நிலை தெரியவில்லை.

இராணுவ ஆட்சியாளர்களும், சமாந்தர அரசாங்கமும் மாறுபட்ட கருத்து நிலைப்பாடுகளைக் கொண்ட இனக்குழுங்கள் சார்ந்த கிளர்ச்சியாளர்களைத் தம்பக்கம் ஈர்ப்பதற்கு பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-36

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00