நடிகர் விஜய் வெளியூர் பயணம்

By Digital Desk 2

07 Apr, 2021 | 04:06 PM
image

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் வெளிநாட்டிற்கு செல்கிறார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு ஜோர்ஜியா நாட்டில் நடைபெறுகிறது. இதில் பங்குபற்றுவதற்காக தளபதி விஜய் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து ஆகாய விமானம் மூலம் ஜோர்ஜியா செல்கிறார்.

நேற்று தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக கடமையை மிதிவண்டியில் பயணித்து நிறைவேற்றிய தளபதி விஜய், இன்று தன்னுடைய தொழில் முறைப் பயணமாக ஜோர்ஜியா சென்றிருக்கிறார்.

தளபதி விஜய், யோகி பாபு, பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியா நாட்டில் பத்துநாட்கள் நடைபெறுவதாகவும், அதன் பின்னர் அவர்கள் தாயகம் திரும்ப இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதால் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். 'தளபதி 65' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்