ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் நிறுவன ஊழியர்களது பங்களிப்புடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு பி.சி.ஆர்  இயந்திரமொன்று நன்கொடையாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை சுகாதார, போசனை மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் நிர்வகிக்கப்படும் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள விசாலமான வைத்தியசாலையாவதோடு 4968 சதுர அடிப்பரப்பளவிலான நில அளவீட்டில் அமைந்துள்ளதுடன் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கும் அண்மித்த பிரதேசத்தவர்களுக்கும் சேவையாற்றி வருகின்றது.

தற்பொழுது நிலவி வருகின்ற சூழ்நிலைக்கேற்ப அன்றாடம் பி.சி.ஆர்  இயந்திரத்தின் தேவையை அடையாளங் கண்டு இவ்வியந்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான பங்களிப்பை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஊழியர் குழாமினர் முன்வந்ததோடு தமது நாளொன்றுக்கான சம்பளத்தை இதற்காக தியாகம் செய்துள்ளனர். அதற்கேற்ப 5 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க பி.சி.ஆர்  இயந்திரத்தை இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையளித்துள்ளதோடு கொவிட் 19 தொற்றுநோய்க்கு எதிராக போராடும் அரச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் பின்பற்றப்படும் மற்றுமொரு நன்கொடையாக சமூக சேவையாக இதனை கருத்திற்கொள்ளலாம்.

இவ் பி.சி.ஆர்  இயந்திரத்தை 2021 மார்ச் 30ஆம் திகதி இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டதோடு இந்நிகழ்வில் கௌரவ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர, கௌரவ சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் உயர் முகாமைத்துவ குழாமினர் மற்றும் ஊழியர் குழாமினர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் உயர் முகாமைத்துவ குழாமினர் மற்றும் ஊழியர் குழாமினர் பங்கேற்றனர்.