வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவர், கீழே விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று, இன்று பசறை கோணக்கலை பெருந்தோட்டத்தின் ரேந்தபொல பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ரேந்தபொல பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த எஸ். இராமச்சந்திரன் என்ற 65 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இன்று காலை தனது வீட்டுத் தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்தார். அந்நிலையில், அவர் கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, அவரது மனைவி தனது கணவருக்கு தேநீர் கொண்டு சென்ற வேளையில், அவர் கீழே விழுந்திருப்பதைக் கண்டு, அவரைத் தூக்க முயற்சித்த வேளையில், அவர் இறந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து குறித்த சம்பவம் பசறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசாரும் அங்கு வந்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன. மாரடைப்பு இம் மரணத்திற்கு காரணமாக இருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM