-என்.கண்ணன்
கொல்கத்தா, புதுடெல்லி போன்ற நகரங்களில் இருந்து 146 ஆண்டுகளாக வெளியாகின்ற, த ஸ்ரேட்மன் (The Statesman) ஆங்கில நாளிதழில் கடந்தவாரம், “தவறான சமிக்ஞை” என்ற தலைப்பில் ஆசிரியர் கருத்து வெளியாகியிருந்தது.
ஜெனிவாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தும் வகையில் அந்த கருத்து எழுப்பட்டிருந்தது.
வழக்கமாக இந்தியாவில் இருந்து வெளியாகின்ற ஆங்கில நாளிதழ்கள், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை அதிகளவில் பிரதிபலிப்பது வழக்கம்.
இந்தியாவின் தேசிய நலன்களின் மீது அதிக அக்கறை கொள்ளப்படுமேயன்றி, அதற்கு குறுக்கே இருக்கக்கூடிய ஏனைய பிரச்சினைகளை அவை பெரிதும் கவனத்திற் கொள்வதில்லை.
அவ்வாறான நிலைக்கு மாறாக, த ஸ்ரேட்மன் ஆங்கில நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் அமைந்திருந்தது.
1980 களில் இலங்கையில் துன்புறுத்தப்பட்ட தமிழ் சிறுபான்மையினர் விவகாரங்களில் தொடர்புபட்டிருந்ததால், 2009 இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியை வழங்குவதில் இந்தியாவுக்கு இரட்டை பொறுப்பு உள்ளது என்று தொடங்குகிறது அந்த பத்தி.
“12 ஆண்டுகளுக்குப் பின்னரும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு முயற்சிகள் பல உரிய பலனளிக்கத் தவறிவிட்டன.
இவ்வாறான நிலையில், ஜெனிவாவில் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு பதிலாக, இந்தியா வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டது.
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான பிரசாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு இது அதிக ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
ஜெனிவாவில் இந்தியாவின் பிரதிநிதி அசோக் மணி பாண்டே, இலங்கையின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு, சமத்துவம், நீதி, அமைதி, கௌரவமான முறையில் இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியான அர்ப்பணிப்பு ஆகிய இரண்டு தூண்களை அடிப்படையாகக் கொண்டதே, புதுடெல்லியின் நிரந்தரமான நிலைப்பாடு என்று கூறியிருந்தார்.
இந்தியாவின் நடவடிக்கையில் ‘இரண்டாவது தூண்’ இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று அதில் விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் தற்போதைய அரசாங்கம் போர்க்குற்றங்களை விசாரிக்க மறுப்பது தொடக்கம் அவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படுவது, தமிழ் மக்களுக்கு எதிரான உரிமைகள் நசுக்கப்படுவது, 20ஆவது திருத்தச்சட்டத்தினால் ஜனநாயக நிறுவகங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, புர்கா தடை என்று ஜெனிவா தீர்மானத்தின் உள்ளார்ந்த விடயங்களையும் அந்த ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-33
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM