- ஹரிகரன்
உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி பெற்ற கொரோனா தடுப்பு மருந்தை மட்டுமே, இலங்கைக்குள் அனுமதிப்போம் என்று பல மாதங்களுக்கு முன்னரே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த இலங்கை அரசாங்கம், அதற்கு மாறான வகையில், சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்தை நாட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இன்னமும், சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கவில்லை.
நான்காவது கட்ட பரிசோதனை அறிக்கையை சீனா முழுமையாக சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட இழுபறியே, சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு காரணமாகும்.
ஆனால், சீனா தனது நாட்டுக்குள்ளே சினோபார்ம் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதுடன், வேறு பல நாடுகளுக்கும் அவற்றை கொடையாக வழங்கியிருக்கிறது.
இலங்கைக்கும், ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பு மருந்துகளை கொடையாகவே வழங்கியிருக்கிறது சீனா.
உலக சுகாதார நிறுவனத்தினால் இன்னமும் அங்கீகரிக்கப்படாத இந்த ஆறு இலட்சம் தடுப்பு மருந்துகள் யாருக்கு செலுத்தப்படவுள்ளன? என்பது தான் கேள்வியாக உள்ளது.
முதற்கட்டமாக, இலங்கையில், கட்டுமானத் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றும், 4500 சீனர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் இந்த நடவடிக்கை நாளை தொடங்கப்படுவதாகவும், அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
எஞ்சிய தடுப்பு மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைக்கும் வரை, குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கப்பட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் அனுமதியளிக்காது போனால், இந்த தடுப்பு மருந்துகள் வீணாகிப் போய் விடுமா? அல்லது யாருக்காவது இரகசியமாக செலுத்தப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த தடுப்பு மருந்தை வழங்குவதில் சீனர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று முதலில் செய்திகள் வெளியானபோது, அதனை சீன தூதரகம் விழுந்தடித்துக் கொண்டு மறுத்திருந்தது.
இலங்கைக்கு 6 இலட்சம் தடுப்பு மருந்துகளை கொடையாக வழங்குவதாகவும், இலங்கை அரசாங்கமே, சீனர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை வழங்குவதாகவும், சீனா தெரிவித்திருந்தது.
இலங்கைக்கு இந்தியா 5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை கொடையாக வழங்கியது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-33
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM