-சுபத்ரா
"இலங்கையின் இறைமையை பாதுகாக்கவும், இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்தவும் வந்திறங்கிய இந்திய படைகள், ஈற்றில் இலங்கையின் இறைமையையும் பாதுகாக்கவில்லை. தனது நாட்டின் நலனையும் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை"
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா உள்ளிட்ட அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக - இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 11 நாடுகளில் பங்களாதேஷும் ஒன்று.
பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போது, வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க, பங்களாதேஷ், பாகிஸ்தான், சோமாலியா, உஸ்பெகிஸ்தான் என நான்கு நாடுகள் மட்டும், இலங்கைக்கு ஆதரவு அளித்திருந்தன.
ஏனைய 10 இஸ்லாமிய நாடுகளும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
நடுநிலை வகித்த இந்தியாவுக்கு வலம் இடமாக உள்ள பாகிஸ்தானும், பங்களாதேஷும், இலங்கையின் பக்கம் நின்று தமது ஆதரவை வெளிப்படுத்தின.
இந்தியாவின் பகை நாடு பாகிஸ்தான். அதுபோல இன்னொரு பகை நாடு சீனா.
இந்த இரண்டும், இலங்கையை ஆதரித்த போது, இந்தியா அதனை மையப்படுத்தி முடிவெடுக்கவில்லை.
அதுபோலவே, பாகிஸ்தானிடமிருந்து – பெரும் அழிவுகளுடன், இந்தியாவின் உதவியுடன் சுதந்திரம் பெற்ற நாடு பங்களாதேஷ்.
பாகிஸ்தான் ஆதரிக்கும் தீர்மானத்தை, தாங்கள் எதிர்க்க வேண்டும் என்று பங்களாதேஷ் நினைக்கவில்லை.
பங்களாதேஷ் சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அண்மையில் ஒரு வார கால கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
இந்த பொன்விழா கொண்டாட்டங்களின் தொடக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தனராக அழைக்கப்பட்டிருந்தார். நிறைவு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கெடுத்திருந்தார்.
1971 இல் பங்களாதேஷ் சுதந்திரப் போர் நிறைவடைந்தது.
இந்தியா தனது படைகளை அனுப்பி, பாகிஸ்தான் படைகளை சரணடையச் செய்துதான், பங்களாதேஷை தனிநாடாக பிரித்தது.
அதுவரை கிழக்கு பாகிஸ்தான் என்றே பங்களாதேஷ் அழைக்கப்பட்டது.
இந்தியாவுக்கு கிழக்கிலும் மேற்கிலும் இருந்த பாகிஸ்தானை, இந்தியா தனது பாதுகாப்பை முன்னிறுத்தியே பங்களாதேஷை தனிநாடாக பிரித்தது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-31
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM