-சத்ரியன்
“அனுசரணை நாடுகளின் மீது தமது “காய்ச்சலை” வெளிப்படுத்த முடியாத அரசாங்கம், அந்த நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் மீது தடையை விதித்து, அந்த ஆத்திரத்தை தணிக்க முயன்றிருக்கிறது”
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம், 22 நாடுகளின் ஆதரவுடன், நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக, புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
ஜெனிவாவில் கடந்த 23 ஆம் திகதி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 25ஆம் திகதி, இந்த தடை தொடர்பான விசேட வர்த்தமானி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இயங்கும், ஏழு புலம்பெயர் அமைப்புகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 300இற்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்களும், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், 2012ஆம் ஆண்டில் முதலாம் இலக்க ஐ.நா. ஒழுங்குவிதிகளின், 4(7) ஆவது பிரிவின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
2014ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலராக இருந்தபோது, புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீது தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
அவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்கள், இலங்கைக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டனர்.
எனினும், 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, புலம்பெயர் தமிழர்களை கையாளும் அணுகுமுறையில் மாற்றம் செய்யப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் நல்லிணக்க சூழலை உருவாக்கப் போவதாக மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதற்கு வசதியாக, ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டதுடன், நூற்றுக்கு அதிகமான தனிநபர்களின் பெயர்களும் கறுப்புப்பட்டியலில் இருந்து அகற்றப்பட்டன.
அதன் பின்னர், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து, மங்கள சமரவீர சில நகர்வுகளை முன்னெடுத்திருந்தார்.
ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு, அப்போதைய அரசாங்கத்துக்கு அது முக்கியமான ஒரு தேவையாகவும் இருந்தது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-28
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM