எம்.எஸ்.தீன்

“முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தாலும், அதற்கான எந்தவொரு நகர்வுகளையும் செய்யாத நிலைமையே நீடித்துக்கொண்டிருக்கின்றது”

அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

பொதுக் கூட்டங்களிலும், கட்சியின் உயர்பீடக் கூட்டங்களிலும் இக்கட்சிகளின் தலைவர்களாகிய ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோர்கள் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கும், தங்களுக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் இஸ்டம் போல் நடந்து கொண்டார்கள். அதனால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விசாரணைகளை மேற்கொள்வற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இக்கருத்தக்களின் ஊடாக இவர்கள் தமது கட்சி ஆதரவாளர்களின் உணர்வுகளுக்கு ஆறுதலைகளை வழங்குவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆதரவாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துக் கொண்டாலும் நடைமுறைப்படுத்துவதில் காலதாமதங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.

இதேவேளை, தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கருத்துக்களை பார்க்கின்ற போது இரு கட்சிகளுக்குள்ளும் மிகப் பெரியளவில் முரண்பாடுகள் உள்ளதாகவே இருக்கின்றன. 

இதனால், இரு கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் ஏற்படுவதற்குரிய சாத்தியங்களே இருப்பதாகவே வெளிப்படையாகத் தெரிகின்றன. 

ஆயினும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தனியறைகளில் மகிழ்ச்சியாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.  இக்கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு ஆணையளித்தவர்களை ஏமாற்றுவதற்காக நாடகம் ஆடிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றன.

நானே தலைவர்

கடந்த 2021 மார்ச் 27ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். 

இதன்போது அவர் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிக்கும் சென்றிருந்தார். ஆனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிலரஸின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுமில்லை. அவர்களை ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட நிகழ்வுகளில் காண முடியவுமில்லை.

இந்த விஜயத்தின்போது சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபவத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது, 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும், கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்தமைக்கான காரணம் குறித்தும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் மிகவும் காரசாரமான கருத்துக்களை முன் வைத்தார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-26

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.