உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அஃப்லாடாக்சின் பொருளை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயுடனான ஆறு கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள கொள்கலன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும், எனினும் அதற்கான உரிய திகதியை குறிப்பிட முடியாது எனவும் இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்கலன்களை கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படும் கப்பல் ஆறு முதல் எட்டு நாட்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர் குறித்த கொள்கலன்கள் ஏற்றுமதி செய்யப்படும்.