மட்டக்களப்பு - திராய்மடு சுவிஸ் கிராமத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவரை இதுவரை கைது செய்யாமைக்கு பொலிஸ் உயர் அதிகாரிகளும் உடந்தையா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்களையும் வயோதிபர்களையும் சிறுவர்களையும் நரி எனப்படும் நபர் ஒருவர் தாக்கியுள்ளனர். இதற்கு சட்டரீதியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த திராய்மடு சுவிஸ் கிராமத்தில் உள்ள தாய் தந்தையை இழந்த சில சிறுவர்களுக்கு இந்த நபர் கடந்த வாரம் தாக்குதல்களை நடத்தியுள்ளார். இதன் காரணமாக பயத்தில் அவர்கள் வைத்தியசாலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளனர்.
ஆனால் இந்த தாக்குதலை நடத்திய நரி சட்டரீதியான பிரச்சினையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் தானாகவே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சுவிஸ் கிராமத்தில் உள்ள பொது அமைப்புகள் ஒரு குழுவாக சேர்ந்து உயர் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து தமது கிராமத்தில் நடந்த இந்த அச்சுறுத்தல் தொடர்பாக எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முறையிட்டுள்ளனர்.
மேலும், நரி என்று சொல்லுபவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர் தொடர்ச்சியாக இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒரு சமாதானமான நிலைக்கு செல்லவும் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
நரி என்பவரால் தாக்கப்பட்ட சுவிஸ் கிராமத்தை சேர்ந்த 6 இளைஞர்களும் மட்டக்களப்பு பொலிஸிற்கு வரவழைத்து நரிக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டு நரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆனால் நரி என்பவருக்கு துணையாக கப்பங்களை வாங்கிவிட்டு சலுகைகளை பெற்று கொண்டு பல வருடங்களாக அவருக்கு உதவி வந்த ஒரு சில பொலிஸ் அதிகாரிகளினால் நரி பொலிஸ் நிலையத்தில் இருந்து மாயமாக மறைந்து விட்டார்.
ஆனால் இவர் மறைந்த சம்பவத்தையடுத்து, ஆத்திரம் அடைந்த மக்கள் பலர் ஒன்று சேர்ந்து பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளார்கள்.
இதையடுத்து, பொலிஸ் உயர் அதிகாரிகள் நரி என்பவரை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக கூறிய வாக்குறுதிக்கு அமைவாக மக்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர். ஆனால் இன்றுவரை நரி கைது செய்யப்படவில்லை.
இருந்தாலும் இது தொடர்பாக ஒரு சில பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஆனாலும் இதில் ஒரு சில பெரிய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருக்கின்றது.
காரணம் சிறையில் வைத்திருந்த நரி எவ்வாறு தப்பினார் என்று பொது மக்களுக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்த ஒரு சில பொலிஸாரின் மேல் சந்தேகம் இருக்கின்றது.
இருந்த போதிலும் அரசாங்க அதிபர் மற்றும் எஸ்.எஸ்.பி. போன்றவர்கள் துரித நடவடிக்கை எடுத்ததன் பலனாக அந்த மக்களும் 6 இளைஞர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர்.
உண்மையான குற்றம் செய்தவர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பவைக்கப்பட்டுள்ளார், மறைக்கப்பட்டுள்ளார், இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை. இது ஒரு சில பொலிஸாரின் தவறான நடவடிக்கை காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக நேரடியாக பார்த்த மக்கள் என்னிடம் கூறியுள்ளனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
எனவே இந்த விடயம் தொடர்பாக வருகின்ற நாட்களில் சுவிஸ் கிராம மக்களும் நாமும் சேர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பேச உள்ளோம்.
நரி கைது செய்யப்பட வேண்டும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இல்லையென்றால் இந்த அடாவடித் தனம் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கு பொலிஸாரின் துணை இருந்து கொண்டே இருக்கும்.
உடனடியாக சட்டத்துக்கு முரணாக செயற்படும் பொலிஸாருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
(சசி)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM