(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி பயங்கரவாதி சஹ்ரான் அல்ல, கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோராவர்.

இவ்விருவரை காட்டிலும் மேலான சூத்திரதாரி எவரும் இல்லை என்பது தற்போது வரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் இனங்காணப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளை அழித்தபோதே கூட்டமைப்பை தடைசெய்திருக்க வேண்டும் - சரத்  வீரசேகர ஆவேசம் | Virakesari.lk

குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாரா புலஸ்தினி உயிருடன் உள்ளாரா அல்லது. இறந்து விட்டாரா  என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிருடன் இருந்தால் அவரை  கைது செய்வது சாதாரண விடயமல்ல என  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை பரிசீலனை செய்த அமைச்சரவை உபகுழுவின்  அறிக்கை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. இதன் போது கருத்துரைக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.