16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 06 ஆம் திகதி காலை 07.00 மணி அளவில் ஆரம்பமானது.
இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் சர்கார் பட பாணியில் 49பி சட்டப்பிரிவை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் வாக்கை பதிவு செய்துள்ளார்.
வாலிபர் ஒருவர் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட (பாகம் எண் 190 வரிசை எண் 990), மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய சென்றார். அப்போது அவரது வாக்கை யாரோ கள்ள வாக்காகச் செலுத்தியது தெரியவந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் தான் யார் என்பதற்கான ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை செலுத்தியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM