ஐஸ், போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது

Published By: Digital Desk 4

06 Apr, 2021 | 04:58 PM
image

கொழும்பிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் இன்று (06) அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் இராணுவத்தினர்  ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி வேனில் சாரதியான கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞனும் மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனுமே இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமாக காணப்பட்ட குறித்த வேன் கிண்ணியா, கண்டலடியூற்று இராணுவ முகாம் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் வைத்து சோதனையிட்ட போது வேனுக்குள்  கோழிக் குஞ்சுகளை ஏற்றிக்கொண்டு அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் ஒரு பக்கெட்டும் ஒரு கிராம் கொண்ட மற்றுமொரு பக்கெட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கிறனர்.

மேலும் கர்ப்பத் தடை மாத்திரைகள்  5 ஐ கொண்ட 130 கார்ட்டுகளும் வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுகள் 5 உம் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வேனில் போதைப்பொருட்களுடன் வந்த நபரொருவர் கிண்ணியாவில் இறங்கியுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருந்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37