எதிர்வரும் பண்டிகை காலங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு வெளியேறுபவர்கள் மீது விரைவான ஆண்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

பண்டிகை காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.