ஜனாதிபதி தடை விதித்து அதிரடித் தீர்மானம்

By T Yuwaraj

05 Apr, 2021 | 08:27 PM
image

(எம்.மனோசித்ரா)

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு உடன் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். 

ஜனாதியின் செயலாளரினால் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியால் இன்று திங்கட்கிழமை இவ்வாறு மரக்கறி எண்ணெய்யை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. 

அதற்கமைய ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மரக்கறி எண்ணெய் விநியோகத்தை உடனடியாக நிறுத்தி வைக்க சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

உடன் அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முற்றாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

அதற்கமைய இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி செயலாளரினால் ஏற்றுமதி , இறக்குமதி திணைக்களத்திற்கு நேற்று மாலை ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மரக்கறி எண்ணெய்யை விநியோகிக்காமல் இருப்பதற்கும் சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு முள்தேங்காய் உற்பத்திக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முள்தேங்காய் உற்பத்திக்கு தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார். 

அதற்கமைய இதுவரையில் பயிரடப்பட்டுள்ள முள்தேங்காய் செடிகளை கட்டம் கட்டமாக அகற்றி அவற்றுக்கு பதிலாக சூழலுக்கு ஏதுவான செடிகளை நாட்டுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். முள்தேங்காய் மற்றும் பாம் எண்ணெய் என்பவற்றின் பாவனையை முழுமையாக தடை செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிளிலின் வந்தவர்களினால் எமது உயிருக்கு...

2022-10-06 16:20:43
news-image

இலங்கைக்கு எதிரான பிரேரணை சர்வதேச சதி...

2022-10-06 16:16:39
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும்...

2022-10-06 16:17:45
news-image

ஐநா மனித உரிமை அமைப்பின் உறுப்புநாடுகள்...

2022-10-06 15:56:27
news-image

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

2022-10-06 15:49:09
news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48