தேசிய உளவுச் சேவை பிரதானி சஹ்ரானை மலேஷியாவில் சந்தித்திருந்தாரா ? :  நளின் பண்டாரவிடம் விசாரணை

Published By: Digital Desk 4

05 Apr, 2021 | 09:44 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய உளவுச் சேவை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மலேஷிய தூதரகத்தில் சேவையாற்றிய போது, அங்கு வைத்து பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீமை சந்தித்துள்ளதாகவும், அவருக்கு இந்தியா, இந்தோனேஷியா செல்ல உதவிகளை செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறிய விடயங்களுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

Articles Tagged Under: CID | Virakesari.lk

தேசிய உளவுச் சேவை பிரதானி  மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவினால் இது குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் விசாரணைகளை சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான  சிறப்பு தனிப்படை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவிடம், சி.ஐ.டி.யின் பிரத்தியேக குழு நேற்று 3 மனி நேரம் அவரை விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.

 இன்று முற்பகல், 9.00 மனி முதல் நன்பகல் 12.15 மணி வரையில் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தின்  முதல் கட்டமாக முறைப்பாட்டாளரான மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே  சி.ஐ.டி.க்கு  சென்று முறைப்பாட்டுக்கு அமைவான தனது வாக்கு மூலத்தை வழங்கியிருந்தார். இந் நிலையிலேயே தற்போது நளின் பண்டாரவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 15:18:46
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16
news-image

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

2026-07-19 14:43:09