132 கர்ப்பிணி பெண்களுக்கு இலங்கையில் கொரோனா தொற்று

Published By: Digital Desk 4

05 Apr, 2021 | 08:11 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் இதுவரையில் 132 கர்ப்பிணி தாய்மார்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் இவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை. அத்தோடு ஒரு வயதிற்கு குறைந்த இரு குழந்தைகள் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகத்தின் தாய்மார் மற்றும் குழந்தைகள் சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான எந்தவொரு கர்ப்பிணி தாய்மாரும் உயிரிழக்கவில்லை. சகலருக்கும் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு அவர்கள் பூரண குணமடைந்துள்ளனர்.

பிரசவத்தின் ஆரம்ப கட்டத்திலும் , குழந்தை பிறக்கும் போதும், பிறந்த பின்னரும் கொவிட் தொற்றுக்கு உள்ளான தாய்மார் காணப்பட்டனர். சுமார் 130 கர்பணி தாய்மார் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

அத்தோடு ஒரு வயதிற்கு குறைந்த குழந்தைகள் இரண்டு கொவிட் தொற்றால் உயிரிழந்திருந்தன. இந்த குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாது வீட்டிலேயே நோய் நிலைமை தீவிரமடைந்தமையால் உயிரிழந்தன.

இதுவரையில் இலங்கையில் கர்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவில்லை. கொவிட் தடுப்பூசி வழங்குவதால் கர்ப்பிணி பெண்கள் கொவிட் தொற்றுக்கு இலக்காக மாட்டார்கள் என்று உறுதிப்படுத்தபடாமையால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை. இதே காரணத்திற்காகவே 18 வயதை விடக் குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி வரை 100 புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 93 536 ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 90 563 பேர் குணமடைந்துள்ளதோடு , 2392 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை நேற்று ஞாயிறுக்கிழமை மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மரணங்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14