ரணில் - சஜித் இணைவு தீவிரமடைந்த பேச்சுக்கள் !

05 Apr, 2021 | 05:02 PM
image

நமது அரசியல் நிருபர்

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையை வைத்து பார்க்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சக்­தியும் அடுத்த மாகா­ண­சபை தேர்­த­லுக்கு முன்­ப­தாக இணைந்து பய­ணிப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.

முக்­கி­ய­மாக இரண்டு தரப்­பி­னரும் இணைந்து பய­ணிப்­பது தொடர்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சஜித் பிரே­ம­தா­சவும் விருப்­பத்­துடன் இருப்­ப­தா­கவும் அதற்­கான பேச்­சுக்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் எனினும் எந்த முறையில் இணைந்து கொள்­வது என்­பது தொடர்­பான ஒரு பொறி­மு­றையை உரு­வாக்க முடி­யா­மையே தாம­தத்­துக்கு கார­ண­மாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது மூலமே வெற்­றியை ருசிக்க முடியும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்­றனர்.

அதே­போன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து பய­ணிப்­பதே சம­யோ­சி­த­மாக அமையும் என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

எனவே இணைந்து பய­ணிக்­க­வேண் டும் என்­பதே இரண்டு தரப்­பி­ன­ரதும் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களின் எதிர் ­பார்ப்­பாக இருக்­கின்­றது. ஆனால் எந்த முறையில் எவ்­வாறு இணைந்து கொள் ­வது என்­பது தொடர்­பான ஒரு சிக்கல் தொடர்ந்து நிலவி வரு­வதை காண­மு­டி­கி­றது.

கடு­மை­யான விரக்­தியில் 16 பேர் கொண்ட குழு

கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது சுதந்­திரக் கட்­சியில் இருந்த 16 பேர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­ய­துடன் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து கொண்­டனர். அப்­போது 54 உறுப்­பி­னர்­க­ளாக இருந்த கூட்டு எதி­ர­ணியின் எண்­ணிக்கை 69 ஆக மாற்­ற­ம­டைந்­தது.

தற்­போது ஜனா­தி­பதி கோட்­டா­ப­யவின் அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள போதி­லும்­கூட இந்த 16 பேர் குழுவில் ஒரு­வரை தவிர எவ­ருக்கும் எந்த பத­வியும் வழங்­கப்­ப­ட­வில்லை. அதில் ஒரு­வ­ரான சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு மட்டும் ஒரு ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்து இருக்­கி­றது. அதுவும் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ ராஜாங்க அமைச்சுப் பத­வியை ஏற்றுக் கொள்ள மறுத்­ததன் கார­ண­மாக அந்த பதவி சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்த தரப்­பினர் பாரிய விரக்­தியில் இருக்­கின்­றனர்.

அவர்கள் அர­சாங்கம் தற்­போது மக்­க ளின் நம்­பிக்­கையை இழந்து வரு­வ­தாக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள 16 பேர் குழுவில் ஒருவர் “நாம் இந்த அர­சாங்­கத்தை மிகவும் நம்­பிக்­கை­யுடன் உரு­வாக்­கினோம். ஜனா­தி­பதி அதி­கா­ரத்தை பெற உழைத்தோம்.

எமக்கு பொறுப்­புகள் வழங்­காமை கவ­லை­ய­ளிக்­கி­றது. இன்று எம் மீது கட்­சியின் தலை­மைத்­துவம் நம்­பிக்கை வைக்­காத நிலைமை காணப்­ப­டு­கி­றது. ஆனால் நாம் அர­சாங்­கத்­திற்­காக மக்­க­ளுக்­காக செயற்­ப­டு வோம். மக்­களின் எம் மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றனர். அந்த நம்­பிக்­கையை நாங்கள் காப்­பாற்­றுவோம்' என்று குறிப்­பிட்­டுள்ளார்.

ரணிலின் தயக்கம்

எதிர்­வரும் புத்­தாண்­டுக்கு பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் ஊடாக ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்லும் சாத்­தியம் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் உறுப்­பி­ன­ராக பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்ல வேண்டும் என்­பதில் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தொடர்ந்து உறு­தி­யாக இருக்­கின்­றனர். அதனை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

அதனை கொள்கை அளவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­றுள்ளார். எனினும் உட­ன­டி­யாக தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பெற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்­வதில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் காட்டி வரு­கின்றார். அது­மட்­டு­மன்றி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தேவை பாரா­ளு­மன்­றத்­திற்கு அதிக அளவில் உண­ரப்­பட்ட பின்­னரே தான் பாரா­ளு­மன்றம் செல்வேன் என்­பதில் அவர் உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது பல்­வேறு சவால்கள் நாட்டில் காணப்­ப­டு­கின்ற நிலையில் எதிர்க்­கட்சி அதனை எவ்­வாறு பாரா­ளு­மன்­றத்தில் சமா­ளிக்கப் போகி­றது என்­பதை ரணில் விக்­கி­ர­ம­சிங்க பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தேவை­யான முக்­கி­ய­மான கட்­டத்தில் தான் பாரா­ளு­மன்­றத்­திற்குள் பிர­வே­சிப்­பது குறித்து தீர்­மா­னிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தரப்பின் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-30

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22