சிவலிங்கம் சிவகுமாரன்

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை நிறைவேற்றம் போன்ற சம்பவங்களால் அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. நிபுணர் குழுவினரை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகின்றது. இந்த சவாலான காலகட்டத்தில் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்களின் இந்த சம்பளப்பிரச்சினை இப்போதைக்கு பேசப்படுமா என்பது சந்தேகமே.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் நோக்கி திரும்பக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளனவா என்று கேட்கத்தோன்றுகின்றது. ஏனெனில் சம்பள நிர்ணயசபை முடிவு செய்த ஆயிரம் ரூபா நாட்சம்பள விவகாரம் தற்போது நீதிமன்றம் சென்றுள்ளது.

அந்த வழக்கு விசாரணைகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு வாத பிரதிவாதங்கள் முடிய எத்தனை மாதங்கள் செல்லுமோ தெரியாது.

இந்நிலையில் கடந்த வாரம் நானுஒயா பகுதியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் “மீண்டும் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதில் பிரச்சினைகள் இல்லை” என்ற கருத்துப்பட பதிலுரைத்திருந்தார். “நாம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி விட்டோம். எனினும் சம்பள நிர்ணய சபை விவகாரத்திலிருந்து வெளியேறி தொழிற்சங்கங்கள் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் பற்றி பேச்சு நடத்த தயார் என்றால் அது குறித்து நாம் பரிசீலிப்போம்” என்றும் அவர் கூறியிருந்தார்.

இழுபறியாகியுள்ள இந்த ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தால் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களின் மீது அதிருப்தி நிலவுவது என்னவோ உண்மை. ஆயிரம் ரூபாவை எந்த வழியிலாவது பெற்றுக்கொடுத்து விட வேண்டும் என்ற ஆர்வ கோளாறில் முன் பின் சிந்திக்காது, தொழிலாளர்களின் வருமானத்துக்கு அப்பாற்பட்டு அவர்களின் நலன்கள் சார்ந்த விடயங்களை புறக்கணித்து சம்பள நிர்ணய சபைக்கு தொழிற்சங்கங்கள் சென்றது சரியா பிழையா என்ற கேள்வி இன்று தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்னவோ உண்மை.

அவர்களின் வேலை நாட்கள், பாதுகாப்பு மற்றும் ஏனைய நலன்புரி விடயங்களை சம்பள நிர்ணய சபையின் ஊடாக தீர்மானிக்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் ஆரம்பத்திலிருந்து கூறி வந்தது. அவற்றை கூட்டு ஒப்பந்தம் மூலமாகவே பாதுகாக்க முடியும் என்பது உண்மையும் கூட.

எனினும் ஆயிரம் ரூபாவை வழங்குவதை இழுத்தடிப்பதற்கு கம்பனிகள் இவ்வாறான காரணங்களை கூறுகின்றனவா என்று கூட ஆரம்பத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டது. பின்னர் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்த பிறகே இதன் தீவிரம் வெளிப்பட்டது.

சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொடுத்து விட்டால் போதுமா என்ற கேள்வி பெருந்தோட்ட சமூகத்தின் மத்தியிலும் அவர்களின் மீது அக்கறை கொண்ட பிரிவினராலும் எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் வாய் திறக்கவில்லை.

கூட்டு ஒப்பந்தம் இல்லாது போய் விட்டால் மாற்றீடாக தொழிலாளர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வேறு ஒரு ஒப்பந்தத்தை எவ்வாறு கைச்சாத்திடுவது, அதற்கு முதலாளிமார்

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-32

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.