விளை­யாட்டு மைதா­னத்­தி­லி­ருந்த எனது மூத்த மகனை சுட்­டுக்­கொன்­றார்கள். இளை­ய­வரை இரா­ணு­வத்­தினர் பிடித்துச் சென்­றார்கள். 11 வரு­டங்­க­ளாகத் தேடிக் கொண்­டி ருக்­கின்றேன். ஆயி­ரக்­க­ணக்­கான பதி­வு­களை செய்து விட்டேன்.

புதிய ஆட்­சி­யா­ளர்­களும் பதில் சொல்­வ­தாகத் தெரி­ய­வில்லை. இனியும் என்னால் பொறுக்­க­மு­டி­யாது. அடுத்த 16 நாட்­களில் மகன் வரா­விட்டால் என்­னு­யிரை மாய்த்துக் கொள்வேன் என தாயொ­ருவர் எச்­ச­ரிக்­கை­வி­டுத்து நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

காணாமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் நான்காம் நாள் அமர்வு நேற்று திங்­கட்­கி­ழமை பருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்­றது.

இதில் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போதே ஆதி­கோ­வி­லடி வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த சதா­சிவம் பூலோ­க­லட்­சுமி என்ற தாயார் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவ­ரு­டைய சாட்­சியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது,

2004 ஆம் ஆண்டு எனது மூத்த மகன் சதா­சிவம் குமரன் வல்­வெட்­டித்­துறை சிதம்பர் விளை­யாட்டு மைதா­னத்தில் விளை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது இனம் தெரி­யாத நபர்கள் அழைத்து அவரை சுட்டுக் கொன்று விட்­டனர்.

இந்த மீளாத் துய­ரத்தில் நாம் மூழ்­கி­யி­ருந்­த­வேளை அதற்­க­டுத்­த­தாக 2005ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி வழமை போன்றே வேலைக்குச் செல்­வ­தாகப் புறப்­பட்ட சதா­சிவம் வசீ­கரன் என்ற எனது இளைய மகனை உடுப்­பிட்டி குஞ்­சர்­கடை சந்­தியில் வைத்து இரா­ணு­வத்­தினர் பிடித்துக் கொண்டு சென்­றனர். இதனை நேரில் கண்­ட­வர்கள் எங்கள் வீட்­டிற்கு வந்து கூறினர்.

அரை மணி நேர இடை­வெ­ளியில் நாம் அந்த இடத்­திற்குச் சென்றோம். அங்கு எனது மகனோ இரா­ணு­வத்­தி­னரோ நின்­றி­ருக்­க­வில்லை.

அதனைத் தொடர்ந்து வல்­வெட்­டித்­துறை மற்றும் ஏனைய பிர­தே­சங்­க­ளி­லுள்ள இரா­ணுவ முகாம்­களில் தேடினோம். தற்­போது வரையில் எங்­கி­ருக்­கிறார் என்று தெரி­ய­வில்லை.

கடந்த காலங்­களில் நாம் ஆயி­ரக்­க­ணக்­கான பதி­வு­களைச் செய்து விட்டோம். புதிய ஜனா­தி­பதி எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்­றுத்­த­ருவார் எனக் கூறி­னார்கள். அவ­ருக்கு வாக்­க­ளித்தோம். 100 நாட்கள் வேலைத்­திட்­டத்தில் எது­வுமே நடக்­க­வில்லை. எம்மை புதிய ஆட்­சி­யா­ளர்­களும் ஏமாற்றி விட்­டார்கள். 11 வரு­டங்­க­ளாக பொறு­மை­யுடன் இருந்தோம். இனியும் எமது மகனை ஒப்­ப­டைப்­பார்கள் என்று நம்­பிக்­கை­யில்­லாது போய்­விட்­டது.

அண்­மையில் 56 பெயர் பட்­டியல் தம்­மிடம் இருப்­ப­தாகக் கூறிக்­கொண்டு எமது வீட்­டிற்கு வல்­வெட்­டித்­துறை பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த புல­னாய்­வா­ளர்கள் வருகை தந்­தி­ருந்­தனர். எனது மகன் தொடர்­பாக தக­வல்­களைக் கேட்­டனர். எனது மகன் உயி­ருடன் இருப்­ப­தா­கவும் கூறினர். ஆனால் அவர் எங்­குள்ளார் என்ன நடந்­தது என யாருமே கூற­வில்லை. தற்­போது உங்­க­ளி­டத்தில் முறைப்­பாடு செய்­கிறேன். கடந்த காலங்­களில் மனித உரிமை ஆணைக்­குழு, செஞ்­சி­லுவைச் சங்கம் உள்­ளிட்ட அமைப்­புக்­க­ளி­டமும் முறைப்­பா­டு­களைச் செய்­துள்ளேன். இனி எங்கு முறைப்­பாடு செய்­வது என்­பது தெரி­ய­துள்­ளது.

எனது இரண்டு ஆண்­பிள்­ளை­க­ளை­யும்­இ­ழந்து இன்று மூன்று பெண் பிள்­ளை­க­ளுடன் இருக்­கின்றேன். என்னால் தொடர்ந்தும் பொறுமை காக்கமுடியாது. அடுத்த 16 நாட்களுக்குள் நீங்கள் எனது மகன் எங்குள்ளார் என்பதை வெ ளிப்படுத்தவேண்டும். அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா என்பதையாவது கூறவேண்டும். இல்லையேல் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன். அந்தச் செய்தியை நீங்கள் அறிவீர்கள் என கண்ணீருடன் எச்சரிக்கை விடுத்தார்.