தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த  அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக  நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதிவி ஷேட வர்த்தமானிக்கு, இடைக்கால தடை விதிக்க கோரி பெருந்தோட்ட நிறுவனங்களால்  தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் மே 5 மற்றும் 17 ஆம்  திகதிகளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.