கூகுள் நிறுவனம் எண்ட்ரோய்ட் மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய டியோ (Duo) எனப்படும் புதிய வீடியோ உரையாடல் செயளி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது பயன்பாட்டிலுள்ள ஐபோன் பேஸ்டைம் (FaceTime), மைக்ரோசோப்டின் ஸ்கைப் (Skype), பேஸ்புக்கின் மெசஞ்சர் செயளி (Messenger) போன்றவை இது போன்று முகம் பார்த்து மற்றவர்களிடம் பேசிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது.
இந்நிலையில் இதே போன்ற வசதியை அளிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படி டியோ (Duo) என்ற செயளியினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மற்ற வீடியோ உரையாடல் செயளி போன்று இருந்தாலும் இதில் "Knock, knock" என்ற ஒரு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மற்றும் தகவலை பெறும் நபர் என இருவரின் கையடக்கதொலைபேசி இலக்கத்தினை பதிவு செய்தால் மட்டுமே வீடியோ உரையாடல் செய்ய முடியும்.
ஆனால் டியோ (Duo) செயளியில் தகவல் அனுப்பும் நபர் மட்டும் கையடக்க தொலைபேசியினை பதிவு செய்து கொண்டால் போதும்.
தற்போது எண்ட்ரோய்ட் மற்றும் ஐபோனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடிய டியோ செயளியின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM