இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 324 ஓட்டங்களை வெற்றியிலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 347 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு 324 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

இதில் தனஞ்சய டி சில்வா 65 ஓட்டங்களையும், லக்மால் 4 ஒட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர்.

இந்த இலக்கை ஆஸி அணி  83 ஓவர்களில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

324 ஓட்டங்கள் சரியான இலக்கா? என்பதைவிட ஆஸி அணியை வைட் வொஷ் செய்ய மெத்தியுஸ் கையாளும் தந்திரமா என கிரிக்கெட் வல்லுனர்கள்  மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.