(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 93 000 ஐ கடந்துள்ளது. இன்று ஞாயிறுக்கிழமை மாலை 6 மணி வரை 97 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 93 392 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 90 208 பேர் குணமடைந்துள்ளதோடு , 2603 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.