அமெரிக்க ராப் பாடகரும், நடிகருமான டி.எம்.எக்ஸ் மாரடைப்பைத் தொடர்ந்து வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் முர்ரே ரிச்மேன் தெரிவித்துள்ளார்.

50 வயதான டி.எம்.எக்ஸ் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கின் ஒயிட் ப்ளைன்ஸில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ரிச்மேன் கூறினார்.

டி.எம்.எக்ஸ் போதைப்பொருட்களை அதிகமாக உட்கொண்டதாக கூறப்படும் நிலையில் மாரடைப்புக்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.

வரி மோசடிக்காக சிறைத் தண்டனை அனுபவித்த டி.எம்.எக்ஸ் 2019 ஜனவரி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.