அர்த்­த­மற்ற முறையில் தமிழ்ப் பிர­தே­சத்தில் புத்தர் சிலை­களை அமைத்து வரு­வது நாட்டில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு பாரிய சதி முயற்­சியே . இதனை அரசு உட­ன­டி­யாகத் தடுத்து நிறுத்­தா­விட்டால் இந்­நாடு மீண்டும் ஓர் பாரிய அழி­வையே சந்­திக்கும் என்றே கரு­து­கின்றோம் என யாழ்ப்­பாணம் இந்து சமயப் பேரவை வெ ளியிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் உரு­வான அமைதிச் சூழ்­நி­லையை குழப்­பி­ய­டித்த பொறுப்பை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஏற்­க­வேண்­டி­வரும். இலங்கைத் தீவில் இந்­துக்­களும் பௌத்­தர்­களும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்­டு­மானால் மத சுதந்­தி­ரத்தின் தனித்­து­வத்­திற்கு மதிப்­ப­ளித்து நடக்­க­வேண்டும். 

தமிழ்ப் பிர­தே­சத்தில் ஒரு­வித கார­ணமும் இன்றிப் புத்தர் சிலை­களை அமைத்­து­வ­ரு­வது தமிழ்­மக்­க­ளுக்கு சின­மூட்டும் நட­வ­டிக்கை என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கின்றோம். இந்த  நட­வ­டிக்­கையில் உள்ள பின்­ன­ணியில் யார் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பதை அரசு கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு தகுந்த புத்­தி­மதி கூற­வேண்டும்.

எமது பிர­தே­சத்தில் நடை­பெற்ற யுத்­தத்­தின்­போது அழிக்­கப்­பட்ட ஆல­யங்­களைப் புன­ர­மைக்க கோடிக்­க­ணக்­கான பணத்தை மக்­களே செல­விட்­டுள்­ளனர். கண்­து­டைப்­பிற்­காக சில இலட்சம் ரூபாய்­களை அரசு வழங்­கி­யி­ருந்­தது. அவை அழி­வ­டைந்த ஆல­யங்­களை புன­ர­மைக்க போது­மா­ன­தாக காணப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் அர்த்­த­மற்ற முறையில் தமிழ்ப் பிர­தே­சத்தில் புத்தர் சிலை­களை அமைத்து வரு­வது நாட்டில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு பாரிய சதி முயற்சியேயாகும். எனவே இதனை அரசு உடனடியாக நிறுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.