(செய்திப்பிரிவு)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள்  அமைதியாக இருப்பது உயர்வானது.  

குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்தும் வரையில் விசாரணை நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும். விசாரணைகளில் எவ்வித தலையீடும் இடம்பெறாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழத்து செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள பிரதமர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :

உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க மக்கள் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்தை  அனுஷ்டிக்கிறார்கள். யேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு மரணிக்காமல் உயிர்தெழுகிறார். 

இந்நிகழ்வை கத்தோலிக்க மக்கள் மரணத்தை வென்ற ஒரு தினமாக கொண்டாடுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க பள்ளிவாசல்கள், ஹோட்டல்களில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத குழுக்களின் தற்கொலை குண்டுத்தாக்குதலின் 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாத குண்டுத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்தாக்குதலினால் உயிரிழந்த  நபர்களின் குடும்பத்தினருக்கும், முழு கத்தோலிக்க மக்களுக்கும் எமது  உணர்வுபூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்த  அரசாங்கம் என்ற   தொடர்ந்து  செயற்பட்டு வருகிறோம் என்பதை நினைவுகூறகிறோம். 

கத்தோலிக்க மக்கள் எதிர்பார்ப்பதை போல தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை  சட்டத்தின் முன் நிறுத்தும் வரையில்  விசாரணை நடவடிக்கைகள் எவ்வித தலையீடுமின்றி முன்னெடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஏற்றப்படும் மெழுகுவர்த்தியின் ஒளி நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

 குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கம் வரையில் கத்தோலிக்க மக்கள் அமைதியாக இருப்பது சிறப்பானது. 

இலங்கை வாழ் கத்தோலிக்க மக்களுக்கு உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள். பல்வேறு சவால்கள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் மக்கள் மத்தியில்  கருணை, அன்பு மற்றும் நல்லொழுக்கம் ஆகியவை என்றும் நிலைத்திருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.