இணையத்தளத்தினுாடாக விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம் யுவதியொருவர் வாதுவ பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாணந்துறை, வலான பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைத் தேடி வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கைதுசெய்யப்ட்ட யுவதி கண்டி-பூஜாபிட்டியைச் சேர்ந்த 29 வயதுடையவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட யுவதியை பொலிஸார் நேற்றையதினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.