தெற்கு அதிவேக பாதையின் கலனிகம பாதைமாறும் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில்  தென் மாகாண கல்வி அமைச்சர்  ரஞ்சித் சோமவன்ச உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த அமைச்சர்  ரஞ்சித் சோமவன்ச, அவரது ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.